தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெலிகிராமிற்கு அடித்த ஜாக்பாட்

வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் 70 மில்லியன் (7 கோடி) பயனாளர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர்.

டெலிக்ராமிற்கு ஜாக்பாட்
டெலிக்ராமிற்கு ஜாக்பாட்

By

Published : Oct 7, 2021, 11:22 AM IST

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் கடந்த திங்கள்கிழமை இரவு ஒரே நேரத்தில் திடீரென முடங்கின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் திடீரென முடங்கியதால் பயனாளர்கள் பெரும் அவதியடைந்தனர்.

பின்னர், சுமார் ஆறு மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் செயலிகளின் செயல்பாடு இயல்புநிலைக்குத் திரும்பியது. இதனால், ஒரே இரவில் மார்க் ஜுக்கர்பெர்க் சுமார் 51 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்தார்.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சில மணிநேர முடக்கம், டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது என்றே கூறலாம். வாட்ஸ்அப் முடக்கத்தை அனுபவித்த பயனாளர்கள், கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் பயனர்களாக மாறியுள்ளனர். இதுவரை ஏழு கோடி புது பயனாளர்கள் கிடைத்திருப்பதாக டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சமூக வலைத்தளங்கள் தற்காலிக முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details