சென்னை: ஆண்டுதோறும் பருவமழை காலத்தில், மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு, வீணாக கடலில் கலக்கிறது.
இந்த உபரிநீரை சேலம் மாவட்டம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், பெத்தநாயகன்பாளையம், கெங்கவல்லி பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில், ராட்சத குழாய்கள் மூலம் வசிஷ்ட நதி, சுவேத நதி மற்றும் ஏரி - குளங்களுக்கு திருப்பிவிடக் கோரி, சேலம் மாவட்டம், புலியங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர் என்.பெருமாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 11 மாவட்டங்களுக்கு பாசன வசதிக்காக தண்ணீர் வழங்கும் மேட்டூர் அணை அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில், 5 கிராமங்களில் மழையை நம்பியே விவசாயிகள் உள்ளதாகவும், அதனால் உபரிநீரை பயன்படுத்தும் வகையில், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வு, இதுகுறித்து நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.
இதையும் படிங்க:காலாவதி மருந்துகள் விநியோகம் - பறக்கும் படைகள் அமைக்க அறிவுறுத்தல்