சென்னையிலிருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று (ஜூன் 18) சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது. அந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சியை சோ்ந்த லட்சுமி (35),கனகவல்லி (29), திண்டுக்கல்லை சேர்ந்த மாரியம்மாள் (39) ஆகிய 3 பெண் பயணிகளின் உடைமைகளில் மொத்தம் ரூபாய் 35 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் சிக்கியது.