சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்குச் செல்லும் விமானத்தில் பெரும் அளவில் கரன்சிகள் கடத்திக்கொண்டு செல்லப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து அந்த அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது சென்னையிலிருந்து தாய்லாந்து செல்லும் விமானத்தில் பயணம்செய்ய வந்த சென்னையைச் சேர்ந்த அபுபக்கர் (39), அப்துல்காதர் (33), பைரோஸ் (46) ஆகியோரை விமான நிலைய அலுவலர்கள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் அவர்களது உடமைகளைச் சோதனை செய்தனர்.
அதில் சூட்கேசில் ரகசிய அடுக்கு அமைத்து அதன் நடுவே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்களை மறைத்துவைத்து கடத்திச் செல்லவதைக் கண்டுபிடித்தனர். இது பற்றி சுங்கத் துறை அலுவலர்கள் விசாரித்தபோது இது தங்களுடையது அல்ல என்றும் இந்தப் பெட்டியை விமான நிலையத்திற்கு வந்தபோது ஒருவர் எங்களிடையே தந்ததாகவும் தெரிவித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சிக்கிய அமெரிக்க டாலர் அதனையடுத்து அவர்களிடமிருந்த ரூ. 1 கோடியே 64 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களைப் பறிமுதல்செய்த சுங்க துறை அலுவலர்கள் மூன்று பேரையும் கைதுசெய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:இளைஞர் அரிவாளால் வெட்டிப் படுகொலை - கொலையாளி யார்?