தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை! - Chennai news

சென்னை : கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 68 வயதான மூதாட்டிக்கு எம்ஜிஎம் மருத்துவமனையில் எண்டோஸ்கோபிக் டிரான்ஸ்நாசல் சுற்றுப்பாதையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருப்பு பூஞ்சை நோயாள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை!
கருப்பு பூஞ்சை நோயாள் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை!

By

Published : May 26, 2021, 9:15 PM IST

சென்னை நகரத்திலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் இன்று (மே 26) கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட 68 வயதான மூதாட்டிக்கு அவசர எண்டோஸ்கோபிக் டிரான்ஸ்நாசல் சுற்றுப்பாதை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

இவர், கடந்த இரண்டு வாரங்களாக கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், இவருக்கு கண் அசைவுகளின்றி, வலது கண்ணைத் திறக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அவருக்கு எண்டோஸ்கோபிக் டிரான்ஸ்நாசல் சுற்றுப்பாதை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, வலது கண்ணின் கண் இமைகளை நீக்கப்பட்ட பிறகு, அவரது பார்வை அப்படியே இருப்பதை மருத்துவர்கள் உறுதிபடுத்தியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details