சென்னை: மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் பிரியா,துணை மேயர் மகேஷ் குமார்,மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் , "சென்னையில் மார்க்கெட், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் என மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் தலா 35.45 லட்சம் மதிப்பில் மிக விரைவில் அமைக்கப்பட உள்ளது.
சென்னையில் 140 இடங்கள் தற்போது வரை தேர்வு செய்து முடிக்கப்பட்டு உள்ளது. பிற இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும். மேலும் சென்னை மாநகராட்சியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த 588 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.