சென்னை:தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் வார்டுகளுக்கு கடந்த பிப்ரவரி 19 அன்று தேர்தல் நடந்து முடிந்தது. மேலும் 7 வாக்கு சாவடிகளில் நேற்று (பிப்ரவரி21) மறு வாக்கு பதிவு நடைபெற்றது.
இந்நிலையில் பல வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 12,602 இடங்களுக்கு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.