தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இ-சேவை மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு! - இ-சேவை மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும்

சென்னை: அரசு இ-சேவை மூலம் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் கூறியுள்ளார்.

upload certificate

By

Published : Nov 5, 2019, 11:34 PM IST

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு மருத்துவ பணி, மருத்துவ சார்நிலை பணிகளுக்கு மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாய்வாளர் பணியில் 49 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்வினை 4308 பேர் எழுதினர். இவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட 102 பேர் பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் அரசு இ-சேவை மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

சமூக நீதி மற்றும் மனித உரிமை கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் சமூகவியலாளர், பொருளாதார வல்லுநர் ஆகிய பணியில் இரண்டு பேர் நியமிக்கப்படவுள்ளனர். இந்தப் பணிக்காக ஆகஸ்ட் 24ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 394 பேர் எழுதினர். அவர்களில் தற்காலிகமாக சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்ட 6 பேரின் பட்டியல் தேர்வாணையத்தின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் வரும் 11ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் அரசு இ சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: குரூப் 2 பணிக்கு நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details