சென்னை:சென்னையில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கான வெளிவட்டச் சாலை அமைக்க 2012ஆம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டது. இரண்டு கட்டங்களாக நிறைவேற்ற முடிவு செய்யப்பட்ட இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக வண்டலூரில் இருந்து, நெமிலிச்சேரி வரை 29.65 கிலோமீட்டர் தூரத்துக்கு சாலை அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரி நில உரிமையாளர்கள் ஆனந்த் கங்கா உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தங்கள் மனுக்களில், நெடுஞ்சாலை சட்டப்படி உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் நிலம் கையகப்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால், சட்டத்தின்படி உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.