தமிழ்நாட்டில் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை தொடர் அங்கீகாரம் பெறவேண்டும். இந்தாண்டு தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கிவரும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். மேலும் விரைவில் பள்ளிகள் அங்கீகாரம் பெற வேண்டுமெனவும் அறிவுரை வழங்கினர். ஆனாலும் 200க்கும் மேற்பட்ட பள்ளிகள் தொடர் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட கல்வி அலுவலர் தொடர் அங்கீகாரம் பெறாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ”பள்ளிக்கல்வித் துறையின் அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகள், விதிமுறைகள் ஆகியவற்றின்படியும், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படியும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அரசின் அங்கீகாரமின்றி செயல்படக் கூடாது. துறை அனுமதியின்றி பள்ளி செயல்படுவது விதிகளுக்கு முரணான செயலாகும். அவ்வாறு பள்ளிகள் செயல்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டும். அதன்பின்னும் பள்ளிகள் செயல்பட்டால் நாள் ஒன்றுக்கு 10,000 ரூபாய் வீதம் அபராதமாக விதிக்க வழிவகையுள்ளது.