தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பாதிப்பு: எம்.பில், பிஹெச்.டி முடிக்க கால நீட்டிப்பு! - கல்வி செய்திகள்

சென்னை: எம்.பில், பிஹெச்.டி முடிக்க ஒரு ஆண்டு காலம் கால நீட்டிப்பு, வழங்கி உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

viva voice in video conferencing
university research date extended

By

Published : Jun 7, 2020, 10:49 AM IST

Updated : Jun 7, 2020, 1:21 PM IST

கரோனா பாதிப்பால் இந்த ஆண்டு எம்.பில் மற்றும் பிஹெச்.டி முடிக்காமல் உள்ளவர்களுக்கு ஒரு ஆண்டு காலம் கால நீட்டிப்பு வழங்கி, உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக உயர் கல்வித்துறைச் செயலாளர் அபூர்வா அனைத்து பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில்,

'எம்.பில் மற்றும் பிஹெச்.டி பயில்பவர்களுக்கு நடத்தப்படும் வாய்வழி தேர்வினை (Viva) கரோனா பாதிப்பால் உரிய நேரத்தில் நடத்தி முடிக்காததால் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாய்வழி தேர்வினை (Viva) சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து நடத்தாமல், காணொலி காட்சி மூலம் நடத்தி முடிக்கலாம்' எனவும் அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:நேத்ராவை மாணவர்கள் பின்பற்ற வேண்டும்- ஆளுநர் பன்வாரிலால்

Last Updated : Jun 7, 2020, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details