சென்னை:மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் அலகுத் தேர்வுகள் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனேவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி சென்னையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
கரோனா பரவல் காரணமாக நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை. மாணவர்களுக்கு பாடங்கள் கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
தேர்வு அட்டவணை வெளியீடு
இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அலகுத் தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா வெளியிட்டுள்ளார்.
அதில் "அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலன், பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் உள்பட அனைவருக்கும் கல்வித் தொலைக்காட்சி, ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
மாணவர்கள் கற்றல் திறனை அதிகரிக்க ஆன்லைன் மூலம் அலகுத் தேர்வுகள் நடத்துவதற்கு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டமும் ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.