சென்னை:யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாசார கட்டடத் திறப்பு விழாவிற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மூன்று நாள் அரசு முறை பயணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கைப் பயணம் மேற்கொண்டார்.
இலங்கை செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இணை அமைச்சர் எல். முருகன்: 'அரசு முறை பயணமாக இலங்கை நாட்டிற்கு மூன்று நாட்கள் செல்கிறோம். கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாணத்தில் கலாசார மையத்தை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி இருந்தார். அது இந்திய நாட்டு நிதி உதவி மூலம் கட்டப்பட்டுள்ளது.
தற்போது, இலங்கை நாட்டில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வருகின்ற 11ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள கலாசார மையம் தொடங்கப்பட உள்ளது. அதில் கலந்து கொள்ள செல்கிறேன்' என்றார்.