சென்னை:அண்ணா சாலையில் உள்ள தென்னிந்திய பிலிம் சேம்பரில் ஒன்றிய தகவல், ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள், பிலிம் சேம்பர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
அதில் ஜிஎஸ்டி, சினிமா பைரசி, கேளிக்கை வரி, ஒளிப்பதிவு சட்ட மசோதா உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து பிலிம் சேம்பர் நிர்வாகிகள் எல்.முருகனிடம் முன்வைத்தனர். மேலும் தங்கள் பிரச்னைகள் குறித்த மனுக்களையும் வழங்கினர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “மத்திய இணை அமைச்சரான பிறகு சென்னை ஊடகத்தினரை முதன்முறையாக சந்திக்கிறேன். தென்னிந்தியாவின் பழம்பெரும் திரைப்பட வர்த்தக மையத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது.