தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேலாண்மை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனுடன் காணொலி காட்சி மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பண்டிகை மற்றும் மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். சமீபகாலமாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.