தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜி-20 மாநாட்டின் சுழற்சிப் பொருளாதார தொழில் கூட்டணியை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைக்கிறார் - பொருளாதாரத் தொழில் கூட்டணி

ஜி-20 மாநாட்டில் சுழற்சிப் பொருளாதார தொழில் கூட்டணியை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

union minister bhupender yadav inaugurates the conference
ஜி20 4-வது சுழற்சிப் பொருளாதார தொழில் கூட்டணி

By

Published : Jul 27, 2023, 4:33 PM IST

சென்னை: இந்தியாவின் G-20 தலைமையின் கீழ் 4வது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை செயற்குழு (ECSWG) சென்னையில் ஜூலை 26 தொடங்கிய நிலையில் ஜூலை 28 வரை நடக்கவிருக்கிறது. இந்த மூன்று நாள் கூட்டத்தில் ஜி20 உறுப்பு நாடுகள், அழைப்பு நாடுகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இதில் கிட்டத்தட்ட 35 சுற்றுச்சூழல் அமைச்சர்களும் பங்கேற்கின்றனர்.

இரண்டாவது நாளான இன்று (ஜூலை 27) ஜி20 4-வது சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை செயற்குழுவின் பக்க நிகழ்வாக ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் தொழில் கூட்டணியை மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

ஜி20 இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சி பொருளாதாரத்தின் உலகளாவிய நடைமுறைகளை மேம்படுத்துவது இந்த தொழில் துறை சார்ந்த முன்முயற்சியின் நோக்கமாகும். நீடித்த சுற்றுச்சூழல் தன்மையில் நிலையான தாக்கத்தை உருவாக்க இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்துக்குப் பின்னரும் தொடரும் வகையில் இந்தக் கூட்டணி தற்சார்பு கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:Ed raid: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

11 நாடுகளில் தலைமையகங்களைக் கொண்டுள்ள 30 நிறுவனங்கள் இந்தக் கூட்டணியின் நிருவக உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவற்றின் கூட்டுத்தளமாக இருக்கும் இந்தக்கூட்டணி, அறிவு பகிர்வு, சிறந்த நடைமுறை பகிர்வு, நீடிக்க வல்ல நடைமுறைகள் ஆகியவற்றைப் பங்கேற்பு தொழில்துறைகளிடையே கொண்டு செல்கிறது.

இந்தக்கூட்டணி தாக்கத்திற்கான கூட்டாண்மை, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, மேம்பாட்டுக்கான நிதி என்ற 3 வழிகாட்டு நெறிமுறைகளைக் கொண்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் குறித்த ஆணையர், கனடா, ஃபிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், மொரீஷியஸ், ஐக்கி அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் முன்னிலையில் மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் ஆதார வளப் பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத் தொழில் கூட்டணியைத் தொடங்கி வைக்கிறார்.

இக்கூட்டணியால் உலகளாவிய சுழற்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் நாடுகள், தொழில்துறைகள் மற்றும் வல்லுநர்களை ஒன்றிணைப்பதே கூட்டணியின் நோக்கமாகும். இந்த முன்முயற்சி ஜி 20 இந்தியத் தலைமைத்துவத்தின் போது ஒரு முக்கியமான சாதனையாக மாறும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு!

ABOUT THE AUTHOR

...view details