தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் - அமைச்சர் கோரிக்கை - அரசு செவிலியர் கல்லூரிகள் துவங்க வேண்டும்

தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசு செவிலியர் கல்லூரி நிறுவ ரூ.1200 கோடி நிதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் துவங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்- மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் துவங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்- மா.சுப்பிரமணியன்

By

Published : Sep 6, 2022, 10:53 PM IST

சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஒன்றிய அரசின் ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனாவால் மற்றும் ஒன்றிய அரசு சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அரசு செயலாளர் ராஜேஷ்பூஷன் ஆகியோரிடம் மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை தொடர்பான கோரிக்கையினை புதுடெல்லியில் இன்று அளித்தார்.

ஒன்றிய அரசின் ஆயுஷ்துறை அமைச்சர் ஸ்ரீ சர்பானந்தா சோனாவாலிடம் அளித்த கோரிக்கைகளின் விவரம் வருமாறு,
'மதுரை மாவட்டம், அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் கட்டடங்கள் சிதிலமடைந்துள்ள நிலையில் அதனை மறுகட்டமைப்பு செய்ய நிதி ஒதுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அகில இந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை தமிழ்நாட்டில் அமைக்க விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையில், 27.01.2019 அன்று மதுரை தோப்பூரில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஒன்றிய அரசு நிறுவ வேண்டும்.

மருத்துவக்கல்லூரி இல்லாத 6 மாவட்டங்களில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி நிறுவ ஒன்றிய அரசின் 60:40 என்ற பங்களிப்புத் திட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும். நீட் தேர்வு குறித்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவு மீது குடியரசுத்தலைவர் ஒப்புதலை விரைந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு மருத்துவக்கல்லூரிகளில் அரசு செவிலியர் கல்லூரி நிறுவ நிதி வழங்க வேண்டும். உக்ரைனில் படித்த மாணவர்கள் இந்தியாவின் மருத்துவக்கல்லூரிகளில் படிப்பினை தொடர வழிவகை செய்ய வேண்டும்.

மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி வரைவு ஒழுங்குமுறை விதிகளை கைவிடுமாறு தேசிய மருத்துவக்குழுமத்திற்கு அறிவுறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு தேசிய நல்வாழ்வு குழுமம், பிரதம மந்திரியின் ஆயூஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம் மற்றும் பதினைந்தாவது நிதி ஆணையம் ஆகியவற்றின் கீழ் 2022-2023 நிதியாண்டுக்கான முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்’ என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பாரத் பயோடெக்கின் உள்நாசி வழியாக செலுத்தப்படும் கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details