தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி' - minister Ma Subramanian

தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், ஏழு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்
மா.சுப்பிரமணியன்

By

Published : Sep 28, 2021, 12:36 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், ஏழு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில் மா. சுப்பிரமணியன் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் நாள்தோறும் 50,000 பயனாளிகள் பயன்பெறும் வகையில் திட்டம் நடைபெறுகிறது.

மீண்டும் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்

பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான, கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை (செப். 29) சேலத்தில் தொடங்கிவைக்கிறார்.

பொது மருத்துவர், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தை, காது, மூக்கு, தொண்டை, மனநல மருத்துவர் என 16 துறை மருத்துவருடன் செயல்படுத்தக் கூடிய இந்தத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் 21 மாநகராட்சிகளின் மூலம் ஆண்டுக்கு 1240 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

850 மருத்துவ மாணவர் சேர்க்கை

தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் தற்போது ஏழு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டிலேயே மாணவர் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்களும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 மாணவர்கள் என மொத்தம் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மீதமுள்ள திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், அரியலூர் ஆகிய மருத்துவக் கல்லூரிகளில் கட்டட பணிகள் முடியவில்லை. அதனை மீண்டும் ஒன்றிய அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.

மெகா தடுப்பூசி முகாம் இல்லை

மேலும், இந்த வாரம் (அக்டோபர் 2) ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்து 500 கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளதால் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் முகாம்கள் அமைக்கப்படும்.

கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராகப் பணிபுரிபவர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணி நியமனம் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜிஎஸ்டி வரம்பு, விலக்கு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்ய அமைச்சர்கள் குழு

ABOUT THE AUTHOR

...view details