சென்னை:இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், "கரோனாவை வெல்ல தடுப்பூசியே ஆயுதம். மக்களும் தடுப்பூசியிட ஆர்வத்துடன் முன்வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், தடுப்பூசிகளை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதை புள்ளிவிவரங்கள் அம்பலப்படுத்துகின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு - உதயநிதி
தடுப்பூசி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதாக திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாகுபாடு காட்டும் ஒன்றிய அரசு
தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவது உண்மைதான் என்றும்; மக்கள் தொகை அடிப்படையில், தடுப்பூசி வழங்கவேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் சுகாதாரத்துறைச்செயலர் ராதாகிருஷ்ணன் இன்று செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:'ஸ்டீல் பாடியாவே இருந்தாலும் தடுப்பூசி போடுங்க' - சத்யராஜ் வலியுறுத்தல்