சென்னை: முதல்முறையாக மதுரைக்கு வெளியே 108 ஓதுவா மூர்த்திகள் மந்திரங்கள் முழங்க நடராஜர் திருச்சபையில் திருமுறை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 12 திருமுறைகளைப் போற்றிடும் வகையில் 'திருமுறை திருவிழா' இன்று (டிச.16) தேதி சென்னை நீலாங்கரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
முதல்முறையாக மதுரைக்கு வெளியே சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். மேலும் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திருவாடுதுறை, தருமபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு சைவ மட ஆதினங்கள் உள்ளிட சைவ மட பீடாதிபதிகளும் பங்கேற்றனர்.
மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், நாதஸ்வர இசை, 100 மாணவர்களின் திருமுறை இசை பாடல், திருமுறைகளால் அதிகம் நாம் பயன் பெறுவது பொருளா? அருளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் உள்ளிட்ட ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், "சமீப காலங்களில் பாரதம் மற்றும் ஆன்மிக அம்சங்களைக் குறித்துத் தொடர்ந்து பொய்யான பரப்புரை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியா என்பது ஒரு நாடு இல்லை.