சென்னை தாம்பரம் அகரம்தென் பகுதியை அடுத்த குறிஞ்சி நகர் பகுதியில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இன்று (ஏப். 1) காலை கோயிலுக்கு வந்த அர்ச்சகருக்கு கோயிலின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்பு அவர் உள்ளே சென்று பார்த்த போது, உண்டியல் உடைக்கபட்டு, அதில் இருந்த காணிக்கை பணம் சுமார் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
சுமார் ரூ. 20 ஆயிரம் பணம் திருட்டு இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் அர்ச்சகர் புகார் அளித்தனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கோயிலில் பொருத்தபட்டு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் செல்வது பதிவாகியிருந்தது.
தற்போது இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பரமத்திவேலூர் திருட்டு வழக்கு: மூவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை!