தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகை கவுதமியின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க உத்தரவு! - நடிகை கவுதமியின் வங்கிக் கணக்கு

மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்தும் பட்சத்தில், நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளின் முடக்கத்தை நீக்கலாம் என வருமான வரித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கவுதமி
நடிகை கவுதமி

By

Published : Mar 24, 2022, 12:24 PM IST

சென்னை: நடிகை கவுதமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள கோட்டையூர் கிராமத்தில் விவசாய நிலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு ரூ.4.10 கோடிக்கு விற்பனை செய்தேன். அந்த சொத்து வருமான வரிச்சட்டப்படி மூலதன சொத்தின் கீழ் வராது. அந்த சொத்து ரூ.4.10 கோடிக்கு விற்கப்பட்டது. வருமான வரித்துறை கூறியபடி ரூ.11.17 கோடிக்கு விற்கப்படவில்லை.

2016-17 வருமான வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூ.34.88 லட்சம் வருமானத்தை ஒப்புக்கொண்டேன். வட்டியுடன் சேர்த்து 9.14 லட்சத்தை வரியாக செலுத்திவிட்டேன். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லியில் உள்ள தேசிய வருமான வரி மதிப்பீட்டு மையத்திலிருந்து கடிதம் வந்தது.

அதில் விவசாய நிலத்தின் வருவாய் ரூ.11.17 கோடி என கருதி மதிப்பீட்டு ஆணை அனுப்பப்பட்டுள்ளது. அந்த உத்தரவைத் தொடர்ந்து தனது ஆறு வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனவே வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மூலதன ஆதாய வரியில் 25 சதவீதம் செலுத்திய பிறகு, நடிகை கவுதமியின் ஆறு வங்கிக் கணக்குகளை முடக்கும் உத்தரவை ரத்து செய்யுமாறு வருமான வரித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நான்கு வாரங்களுக்குள் பகுதி கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மதிப்பீட்டு உத்தரவின் செயல்பாடுகளையும் நிறுத்திவைத்து வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலின் இன்று துபாய் பயணம்

ABOUT THE AUTHOR

...view details