தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து! - போக்குவரத்து நெரிசல்

சென்னை: போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்

By

Published : Jun 4, 2019, 5:13 PM IST

சென்னை அடையாறு எல்பி சாலையில் பேருந்து பணிமனை சிக்னலில் இன்று காலை பச்சை நிற விளக்கிற்காக வாகனங்கள் அனைத்தும் காத்துக் கொண்டிருந்தன. அப்போது சிக்னலின் முன் நின்று கொண்டிருந்த கார் பச்சை நிற விளக்கு விழுந்தவுடன், வேகமாக சென்று சாலை ஓரமாக சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.

விபத்துக்குள்ளான இருசக்கர வாகனம்

இதன்பின்னர் சாலையின் ஓரமாக உள்ள மரத்தில் அந்த கார் மோதி நின்றது. இதனால் எல்பி சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் விபத்து காரணமாக சில மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details