தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் - மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை சுற்றறிக்கை! - 2020 மார்ச்

சென்னை: அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் ஆண்டு தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை தெரிவித்திருக்கிறது.

circular

By

Published : Sep 6, 2019, 1:33 PM IST

தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளில் இந்த ஆண்டு மேல்நிலை பொதுத் தேர்வு எழுத முதலாமாண்டு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியல், அப்பள்ளிகள்
இணைக்கப்பட வேண்டிய தேர்வு மையம் மற்றும் இணைப்புப் பள்ளிகள் மாற்றம் குறித்த விவரங்களை வரும் 30ஆம் தேதிக்குள் dgef3sec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை சுற்றறிக்கை

மேலும், அந்தந்த மாவட்டங்களில் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகளின் விவரத்தை ஆய்வு செய்து அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. நடப்புக் கல்வியாண்டில் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 2020 மார்ச் மாதம் நடைபெறும் மேல்நிலைப் பொதுத் தேர்வு எழுத அனுமதிக்கப் படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குறிய விவரங்களை உரிய பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தேர்வுத் துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details