வங்கக் கடலில் தொடர்ந்து நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
அம்பன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது வடமேற்கு திசையில் சென்று, பின்னர் வடகிழக்கு திசை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் வட கிழக்கு பகுதிகளான மேற்கு வங்கம், பங்களாதேஷ் போன்ற பகுதிகளில் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.