அகில உலக கலைஞர் சங்கம் சார்பாக 'உலகத் தமிழ் கலைஞர் மாநாடு' வரும் 2020ஆம் ஆண்டு இலங்கை, யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்க்கான 'டீசர்' வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கு ஒன்றில் நேற்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் இராஜமாணிக்கம், சீர்காழி சிவசிதம்பரம், திரைப்பட பாடலாசிரியர் கபிலன், நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
'உலகத் தமிழ் கலைஞர் மாநாடு' டீசர் வெளியீட்டு விழா
சென்னை: இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் கலைஞர்கள் மாநாட்டிற்கான 'டீசர்' வெளியீட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய சங்க நிர்வாகிகள், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் மாநாட்டு தேதி அறிவிக்கப்படுமெனவும், மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் 10,000 கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நாட்டுப்புறக் கலைஞர்கள், கலைத்துறையில் சாதித்தவர்கள், எழுத்தாளர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மூன்று நாள் நிகழ்வில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும். மேலும் சிறுவர்களுக்கும், மாணவர்களுக்கும் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.