சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவை நிராகரித்த ஆளுநர் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் உதயநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில்,
”நீட் விலக்கு மசோதா, ஒட்டுமொத்த தமிழர்களின் எண்ணத் தொகுப்பு. ஏ.கே. ராஜன் அவர்களின் அறிக்கை மூலம் பிற மாநிலத்தவரும் இதை உணரும்போது ஆளுநருக்குத் தெரியாமல் போனது ஏன்? நம் கல்வி-மருத்துவம், சமூகநீதியின் அடித்தளத்தில் எழுப்பப்பட்டுள்ள கோட்டை என்பதை ஆளுநர் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை” எனப் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க:ஆங்கில கேள்விக்கு இந்தியில் பதிலளித்த ஜோதிராதித்ய சிந்தியா!