தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்று மாசுவை குறைக்க பல்கலைக்கழக மானியக்குழு புதிய முயற்சி! - University grant commision

சென்னை: காற்று மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்று நட வேண்டும் என பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

UGC

By

Published : Aug 4, 2019, 1:39 AM IST

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட சுற்றறிக்கையில், "சுற்றுச்சூழலை பாதுகாக்க உயர் கல்வி நிறுவனங்கள் உட்பட அனைவரும் சேர்ந்து பங்களிக்க வேண்டும். காற்று மாசு இல்லாத சுற்றுச்சூழலை உருவாக்க ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்றை நட வேண்டும். இதற்கு முன்பாகவே மாசை கட்டுப்படுத்த பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பல முயற்சிகள் எடுத்துள்ளன.

பல்கலைக்கழக மானியக்குழு அறிக்கை

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் மாணவர் அனைவரும் மரங்கன்றுகளை நடவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details