தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு : ஏப்.2 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு

மத்திய பல்கலைக் கழக சேர்க்கைக்கான பொது பல்கலைக் கழக நுழைவு தேர்வுக்கு, வரும் ஏப்.2ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு : ஏப்ரல்-2 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு : ஏப்ரல்-2 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

By

Published : Mar 27, 2022, 6:26 PM IST

சென்னை:நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில், 2022-23ஆம் ஆண்டு முதல், இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலமாகவே நடத்தப்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதியுதவியைப் பெறும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும், கலை, அறிவியல் உள்ளிட்ட இளநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை, தேசிய தேர்வு முகமை நடத்தும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET)மூலமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வினை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் ஏற்கலாம் எனவும் அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் ஜூலை முதல் வாரத்தில் CUETதேர்வு நடத்தப்படவுள்ளது.

இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில், இளங்கலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் (CUET)தேர்வுக்கு, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன பாடத்திட்டத்தின்படி நடத்தப்படும்.

தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், குஜராத்தி, ஒடியா, பெங்காலி, அஸ்ஸாமி, பஞ்சாபி, ஆங்கிலம், இந்தி, உருது ஆகிய 13 மொழிகளில் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. வெளிநாட்டு மாணவர்களுக்காக 19 மொழிகளிலும் மொழித்திறன் தேர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது.

கணக்கு பதிவியில், உயிரியல், உயிரி தொழில்நுட்பம், வணிக பாடங்கள், வேதியியல், கம்ப்யூட்டர் உள்ளிட்ட 27 பாடப்பிரிவுகளில் 6 பாடப்பிரிவுகளை தேர்வு செய்து, தேர்வு எழுத வேண்டும். பொது அறிவை சோதிக்கும் வகையிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:முதுகலை பொறியியல் படிப்பிற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details