தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சஞ்சனாவின் தூய அன்புக்கு நன்றி - உதயநிதி ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

எம்எல்ஏ உதயநிதியின் புகைப்படத்தை அவருக்கே அன்பளிப்பாக கொடுத்து ஒரு சிறுமி சர்ப்ரைஸ் அளித்துள்ளார்.

Udayanithi Stalin
Udayanithi Stalin

By

Published : Jul 3, 2021, 11:43 PM IST

Updated : Jul 4, 2021, 7:17 AM IST

2021 சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கு பின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி அதிக கவனம் பெற்று வருகிறார். தனது தொகுதியில் பம்பரமாய் சுழன்று வேலை செய்கிறார் என தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. மக்கள் ஆதரவை பெற்று வரும் உதயநிதிக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில், விருத்தாசலத்தைச் சேர்ந்த சிறுமி சஞ்சனா கொரோனா தடுப்பு பணிக்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு தன் சேமிப்பு ரூ. 146ஐ இன்று என்னிடம் வழங்கினார். மேலும், ரவை, கடுகு, உப்பை கொண்டு என்னை ஓவியமாக வரைந்து என்னிடம் பரிசளித்தார். சஞ்சனாவின் தூய அன்புக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பெருமாள்தான் வேணுமா; முருகன் வேணாமா - சேகர் பாபு குறித்து பணியாளர்கள் ஆதங்கம்!

Last Updated : Jul 4, 2021, 7:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details