தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஸ்டாலின் முயற்சியில் இணைந்த ரஜினிக்கு நன்றி'- உதயநிதி ட்வீட் - Rajinikanth tweet on sathankulam issue

சென்னை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்த நடிகர் ரஜினிகாந்திற்கு உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Udhayanidhi  thanked actor Rajjnikanth on Sathankulam issue
Udhayanidhi  thanked actor Rajjnikanth on Sathankulam issue

By

Published : Jul 2, 2020, 9:43 AM IST

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் உயிரிழந்த ஜெயராஜ் பெனிக்ஸ் குடும்பத்திற்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,“தந்தையும், மகனும் சித்திரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும் காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

பலரும் ரஜினிகாந்த்தின் இந்த பதிவை வரவேற்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்திற்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பும் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details