அண்ணா பல்கலைக்கழகத்திற்குச் சிறப்புத் தகுதி வழங்கக்கோரி மத்திய அரசிற்கு யாருடைய ஆலோசனையுமின்றி பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா கடிதம் எழுதினார். துணைவேந்தர் சூரப்பாவின் இந்தச் செயல் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, "அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சீர்மிகு அந்தஸ்து கிடைத்தால் அதிக அளவில் நிதி வருவாய் கிடைக்கும். மேலும், இந்த நிதியின் மூலம் பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், ஆய்வு மேற்கொள்ளுதல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு போன்றவற்றால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும்" எனத் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். இது குறித்து திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, உயர்சிறப்பு அந்தஸ்து என்னும் பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசின் காவிப்பிடியில் சேர்க்க துடிக்கும் சூரப்பாவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அண்ணா பல்கலைக்கழக வளாகங்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் #SaveAnnaUniversity என்ற ஹேஷ்டேக்கில் அண்ணா பல்கலைக்கழகம் பற்றி எரிவதைப் போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: எடுபிடிகளுக்கு விவசாயிகள் விரைவில் பாடம் புகட்டுவர் - உதயநிதி ஸ்டாலின்