தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளையராஜாவை விமர்சிக்கக்கூடாது - உதயநிதி ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

இளையராஜாவை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

udhayanidhi stalin  cm stalin advised not to give comment against ilayaraaja  cm stalin  ilayaraja  ilayaraja article  இளையராஜாவை விமர்சிக்க கூடாது என முதலமைச்சர் அறிவுரை  முதலமைச்சர் அறிவுரை  உதயநிதி ஸ்டாலின்  இளையராஜா கட்டுரை
உதயநிதி ஸ்டாலின்

By

Published : Apr 18, 2022, 10:06 PM IST

சென்னை: சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் சட்டக்கல்லூரி பெண்கள் விடுதி அருகே, வளைய சுற்றுத்தர மின் அமைப்பினை திறந்து வைத்தார். இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய உதயநிதி, "இளையராஜா கூறியது அவரின் சொந்த கருத்து. இளையராஜா குறித்து எந்த கருத்தையும் திமுகவினர் தெரிவிக்கக்கூடாது என முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். நாகரிகமற்ற முறையில் யாரை விமர்சித்தாலும் அது நிச்சயமாக தவறுதான்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சேப்பாக்கம் தொகுதியில் அமைச்சர்கள் அதிகளவில் வருவதால் நல்லது தானே. நானும் தமிழ்நாடு முழுவதும் அனைத்து தொகுதிகளுக்கும் சென்றுவருகிறேன். அமைச்சர், துணை முதலமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாக முதலமைச்சர் பார்த்துக்கொள்வார். மேலும் ஜூன் மாதத்திற்குள் இன்னும் 48 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: படித்த மேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை இளையராஜா ஒப்பிடுவது நல்லது அல்ல - கார்த்திக் சிதம்பரம் எம்.பி.!

ABOUT THE AUTHOR

...view details