தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனது தொகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு உதயநிதி வேண்டுகோள்! - சென்னை செய்திகள்

சென்னை: சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், இன்று (மே.16) மூன்று இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்களைத் தொடங்கி வைத்தார்.

தனது தொகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு உதயநிதி வேண்டுகோள்!
தனது தொகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு உதயநிதி வேண்டுகோள்!

By

Published : May 16, 2021, 7:10 PM IST

வி.ஆர் பிள்ளைத் தெரு, கேனல் சாலை, முத்தையா தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம்களை உதயநிதி ஸ்டாலின் இன்று (மே.16) தொடங்கி வைத்தார்.

பின்னர் திருவல்லிக்கேணி பகுதிகளில் உள்ள காலிங்கராயன் தெரு, வெங்கட் ராமன் தெரு, லாய்ட்ஸ் காலனி போன்ற பகுதிகளில் வீடு வீடாகச் சென்ற உதயநிதி, ”தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களா? போட்டுக் கொள்வதற்கு என்ன தயக்கம்?” என்று கேள்வி எழுப்பினார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்துமாறு கோரிய உதயநிதி ஸ்டாலின்

பின்னர் தன்னுடன் இருந்த திமுகவினர், இளைஞர்களிடம் தடுப்பூசி போடுவது குறித்த முக்கியத்துவத்தை உதயநிதி விளக்கினார். தேர்தலில் வெற்றிபெற்று எம்எல்ஏவாக தொகுதிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினிடம், பொது மக்கள் பலரும் தங்கள் பகுதியின் குறைகளை எடுத்துரைத்தனர்.

உதயநிதியிடம் தொகுதிப் பிரச்னைகளை எடுத்துரைத்த மக்கள்

அனைத்தையும் கேட்டுக் கொண்ட உதயநிதி, கோரிக்கைகளை தீர்த்து வைப்பதாக மக்களிடம் உறுதியளித்தார்.

இதையும் படிங்க:5 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்

ABOUT THE AUTHOR

...view details