தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமைச்செயலகத்தில் தயாராகி வரும் அமைச்சர் அறை உதயநிதி ஸ்டாலினுக்கா? - முதலமைச்சர் ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை அடுத்து, சென்னை தலைமைச்செயலகத்தில் அவருக்கான அறை தயார் செய்யப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

தலைமைச் செயலகத்தில் தயாராகி வரும் அமைச்சர் அறை உதயநிதி ஸ்டாலினுக்கா?
தலைமைச் செயலகத்தில் தயாராகி வரும் அமைச்சர் அறை உதயநிதி ஸ்டாலினுக்கா?

By

Published : Dec 12, 2022, 4:36 PM IST

Updated : Dec 12, 2022, 4:49 PM IST

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக உள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவலை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் அவருக்கான அறை தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது

சென்னை: தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர், 34 அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் இதர துறை செயலாளர்களின் அறைகள் உள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்காக தலைமைச்செயலகத்தின் இரண்டாவது மாடியில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அலுவலர்களின் அறை மாற்றப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இதனை தலைமைச் செயலக பொதுப்பணித்துறை சார்ந்த 50 ஊழியர்கள் மாற்றி வருகின்றனர்.

மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது குறித்து இன்று (டிச.12) மாலை அறிவிப்பு வெளியாகி, வரும் 14ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் அவருக்கான பதவிப்பிராமணம் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க:உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி..? முதலமைச்சர் முடிவு..!

Last Updated : Dec 12, 2022, 4:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details