சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது முழு முடக்கம் அறிவித்துள்ள நிலையில், பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், தங்களால் முடிந்த உதவிகளைப் பொது மக்கள், முக்கியப் பிரபலங்கள், நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.
ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்! இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், ரூ.25 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சரிடம் நேரில் வழங்கினார்.
இதையும் படிங்க: 'பிரசவத்திற்கு மட்டுமல்ல கரோனா நோயாளிகளுக்கும் இலவசம்' - ஆட்டோக்காரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு