சென்னை: எழும்பூர் எத்திராஜ் சாலையில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வருபவர் பாபு. அதே அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் வரவு செலவு போன்ற அனைத்தையும் இவரே பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் (மே.17) ஆம் தேதி மதியம் பாபு அலுவலகத்திற்கு சென்று அறக்கட்டளை மற்றும் ரசிகர் மன்றம் தொடர்பான ஆவணங்களை சரிபார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் அன்று இரவு 11 மணிக்கு இந்த சோதனை நடந்து முடிந்தது.
சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை நடைபெறும் போது பாபு அலுவலகத்தில் இல்லை என்பதால், நேரில் ஆஜராக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று அவர் நேரில் ஆஜாராகினார் என்பது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணியளவில் ஆவணங்களை சமர்ப்பித்து நேரில் ஆஜரானார். அதனைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 2 மணி நேரம் பாவுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மீண்டும் பாவுவை மறுநாள் விசாரணைக்கு படி தெரிவித்திருந்தனர்.