தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கிட்ஸ்களுக்கு கிரிக்கெட் கிட்': இது உதயநிதி உலா - Udayanidhi Stalin's tweet

குப்பை கொட்டப்படும் இடம் முதல் பொது கழிவறை வரை தொகுதியின் சந்து, பொந்துக்கெல்லாம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் இன்று சிறுவர், சிறுமியர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு
உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு

By

Published : May 25, 2021, 5:34 PM IST

திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் அண்மைக்காலமாகவே தனது தொகுதி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்துவருகிறார்.

குப்பை கொட்டப்படும் இடம் முதல் பொது கழிவறை வரை தொகுதியின் சந்து, பொந்துக்கெல்லாம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றி வருகிறார். மேலும் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குவது, கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டப் பணிகளையும் செய்துவருகிறார்.

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் பதிவு

நாள்தோறும் தொகுதியில் தான் மேற்கொண்டு வரும் பணிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார்.

இந்த நிலையில் இன்று நடேசன் சாலைப் பகுதியில், கரோனா தடுப்பு நடைமுறைகளைப் பின்பற்றி முறையாக முகக்கவசம் அணிந்திருந்த சிறுவர், சிறுமியரை ஊக்கப்படுத்தும் வகையில், அவர்களுக்கு கிரிக்கெட் பேட், பந்து வழங்கியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தொகுதியில் பொதுமக்களுக்குக் கரோனா நிவாரணமாக மளிகைப் பொருள்களையும் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;

'18+ க்கு தடுப்பூசி: அறிவித்தால் மட்டும் போதாது. செயல்படுத்துங்கள்' - கே எஸ் அழகிரி

ABOUT THE AUTHOR

...view details