சென்னை: செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் சுமார் 400 பேர் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியார்களிடம் பேசிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”கேலோ இந்தியா போட்டி நடைபெறும் இடங்களை ஆய்வு செய்ய நிர்வாகிகள் வந்து கொண்டிருக்கிரார்கள். முதன் முதலில் தமிழ்நாட்டில் இந்த போட்டியை நடத்த இந்த வாய்ப்பை கொடுத்த மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராத் தாகூர், மற்றும் ஒன்றிய அரசுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடத்தியது போல் வரக்கூடிய ஏசியன் ஹாக்கி போட்டியையும் நடத்த உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக கேலோ இந்தியா, ஏசியன் ஹாக்கி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்க விழா, நிறைவு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தான் இருக்கிறார் நாங்களும் கண்டிப்பாக அழைப்போம்.
கேலோ இந்தியா போட்டிகளை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடத்தலாமா என்பது குறித்து வசதிகளை பார்வையிட்டு முதற்கட்ட கூட்டத்தில் பேசியுள்ளோம். தொடர்ந்து நடைபெறும் கூட்டங்களில் முடிவு செய்யப்படும்.
இதையும் படிங்க: ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்