தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருக்குவளையில் சந்திப்போம் - சூறாவளி பரப்புரைக்கு கிளம்பிய உதயநிதி - திருக்குவளை புறப்பட்டார் உதயநிதி

சென்னை: வருகிற சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக சென்னை விமான நிலையத்திலிருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளை புறப்பட்டார்.

100 நாள் சூறாவளி பரப்புரை: திருக்குவளை புறப்பட்டார் உதயநிதி!
100 நாள் சூறாவளி பரப்புரை: திருக்குவளை புறப்பட்டார் உதயநிதி!

By

Published : Nov 19, 2020, 10:06 PM IST

Updated : Nov 19, 2020, 10:48 PM IST

அடுத்தாண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்கட்சியாக உள்ள திமுக இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அதற்கு ஏற்றார்போல ஐபேக் உடன் ஒப்பந்தம், 'எல்லாரும் நம்முடன்' திமுகவும் பல்வேறு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாளைமுதல் 100 நாள்கள் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் தனது பரப்புரையை தொடங்கவுள்ளார்.

அதற்காக உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ. 19) மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி புறப்பட்டார். உதயநிதியை வழி அனுப்ப மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் குவிந்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி, திருக்குவளையில் சந்திப்போம் என சொல்லிவிட்டு விரைந்தார்.

100 நாள் சூறாவளி பரப்புரை: திருக்குவளை புறப்பட்டார் உதயநிதி!

முன்னதாக, இன்று (நவ. 19) மாலை கருணநிதி நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க: சென்னை மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு தனி வகுப்பு

Last Updated : Nov 19, 2020, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details