சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், கடந்த சில நாள்களாக தனது தொகுதிக்குச் சென்று அங்கு வசிக்கும் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாது தனது தொகுதியில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு எளிதில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளை செய்து கொடுத்து வருகிறார். மேலும் நிவாரணப் பொருள்கள், பல நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய உதயநிதி! - பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு நிவாரணப் பொருட்கள்
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார்.
அந்த வகையில், இன்று (மே.22) உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா ஊரடங்கால் கோயில்கள் அனைத்திலும் பொதுமக்கள் தரிசனம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் குருக்கள்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட ஊரடங்கு கால நிவாரணப் பொருள்களை இன்று வழங்கினோம்" எனப் பதிவிட்டுள்ளார்.