தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அக்கட்சி இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் மோகன்ராஜிடம் வேட்புமனு தாக்கல்செய்தார். அவருடன் மாவட்டச் செயலாளர் சிற்றரசு, பகுதிச் செயலாளர் காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
குடும்ப அரசியல்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "எனது வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது. இது நியமன பதவி அல்ல, என்னைத் தேர்ந்தெடுப்பது குறித்து சேப்பாக்கம் மக்கள் முடிவுசெய்வார்கள். குடும்ப அரசியல் செய்தால் என்னை நிராகரிப்பார்கள்.
சிஏஏ-வும், சிஎம் பேசியதும்
சட்டப்பேரவையில் சிஐஏ சட்டத்தால் பாதிப்பு இல்லை என எடப்பாடி பழனிசாமி பேசினார். தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையில் அச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தை தொடக்கம் முதல் எதிர்த்து வந்தது திமுக, சிறுபான்மையினர் திமுகவை மட்டுமே நம்புவார்கள். பத்தாண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாமல் தற்போது புதிய வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள்" என்று கூறினார்.
கட்டப்பஞ்சாயத்து
திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்து செய்வது அதிகரிக்கும் என்ற குற்றச்சாட்டு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கும் நிலைநாட்டப்படும்" என்றார்.
இதையும் படிங்க:தாத்தா சமாதி முதல் அரசியல் தலைவர்கள் வரை - வாழ்த்து பெற்று வரும் இளம் தலைவர்!