தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்கிறார்? - Udayanidhi Stalin

சென்னை: திமுக இளைஞரணி செயலாளராக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பொறுபேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முரசொலி விழாவின் போது இருவரும் இணைந்தது

By

Published : Jul 4, 2019, 10:19 AM IST

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளராக இருந்த மு.பே சாமிநாதன் அண்மையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமையிடம் அளித்தார். இதனையடுத்து அப்பதவிக்கு நிர்வாகியை தேர்வு செய்யும் பணியை கட்சியின் தலைமை மேற்கொண்டுள்ளது.

ஸ்டாலின், உதயநிதி

இந்நிலையில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலின் மேலாண்மை இயக்குநரான உதயநிதி அப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றோ அல்லது நாளையோ அவர் திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவியை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

முரசொலி விழாவின் போது இருவரும் இணைந்தது

மேலும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்டார். குறிப்பாக திருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய உதயநிதி தனக்கு கட்சியில் பொறுப்புகள் தேவையில்லை என்றும், தொண்டனாகவே இருந்து சேவை செய்ய விரும்புவதாக கூறியிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details