சென்னை: மயிலாப்பூர் தொகுதியில் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள், மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து 'எங்கள் மயிலாப்பூர்' திட்டத்திற்கான லோகோவை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர், திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி, "சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்ற வெற்றி உண்மையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி. முதலமைச்சர் கூறியது போல் எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். வாக்களிக்காதவர்கள் ஏன் வாக்களிக்கவில்லை என வருத்தமடைவார்கள்.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய உதயநிதி ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் அனைத்து அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வேகமாக செயல்பட்டு கரோனாவை கட்டுப்படுத்தினோம். 3ஆவது அலை வரக்கூடாது, வர விடமாட்டோம். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு வேண்டும். கரோனா பேரிடரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுதான்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு!