தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒத்த செருப்பு விருது விவகாரம்: மன்னிப்பு கேட்ட உதயநிதி - கோப வார்த்தைகளை கோடிட்ட இடங்களாக மாற்றிய பார்த்திபன் - திமுக எம்பி செந்தில்குமார்

சென்னை: ஒத்த செருப்பு படத்துக்கு விருது கிடைத்தது தொடர்பாக, திமுக எம்பி கூறிய கருத்துக்கு அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்ததையடுத்து, கோப வார்த்தைகளை கோடிட்ட இடங்களாக மாற்றியதாக நடிகர் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்த செருப்பு விருது விவகாரம், மனிப்பு கேட்ட உதயநிதி : கோப வார்த்தைகளை கோடிட்ட இடங்களாக மாற்றிய பார்த்திபன்
ஒத்த செருப்பு விருது விவகாரம், மனிப்பு கேட்ட உதயநிதி : கோப வார்த்தைகளை கோடிட்ட இடங்களாக மாற்றிய பார்த்திபன்

By

Published : Oct 24, 2020, 12:31 PM IST

நடிகர் பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்த ஒத்த செருப்பு திரைப்படத்துக்கு மத்திய அரசு அண்மையில் விருது அறிவித்தது. இந்த அறிவிப்பு தொடர்பாக ட்வீட் செய்த திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், அண்ணனுக்கு பாஜகாவில் ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்... என பதிவிட்டிருந்தார். எம்.பி.,யின் இந்த கருத்திற்கு ரசிகர்களும், நடிகர் பார்த்திபனும் பதிலடி கொடுத்து வந்தனர்.

இதற்கிடையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் விருது குறித்து திமுக எம்பி செந்தில்குமாரின் கருத்திற்காக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள நடிகர் பார்த்திபன், “சூரியன் உதிக்கும் முன் கண் விழித்த எனக்கு உடன்பிறப்புகளின் எதிர்கால நம்பிக்கையான உதயநிதி ஸ்டாலின், வருத்தம் தெரிவித்து எனக்கு ஒலிப்பதிவு செய்துள்ளதை கேட்டேன். அவருடைய பெருந்தன்மையைக் கண்டு என் கோப வார்த்தைகளை மேற்படி கோடிட்ட இடங்களாக மாற்றினேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details