தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அரசு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டதை தங்களது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படமாக பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று (மே.12) முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கரோனாவைத் தடுப்பதற்கான முக்கிய ஆயுதம் தடுப்பூசி. முதல் டோஸ் கரோனா தடுப்பூசியை இன்று போட்டுக்கோண்டேன்.
கரோனாவை வெல்ல தடுப்பூசி மட்டுமே நம் முன்னிருக்கும் ஒரே வாய்ப்பு. எனவே, பொதுமக்கள் அனைவரும் தயங்காமல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். முகக்கவசம் அணியுங்கள், பாதுகாப்புடன் இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்: பிரதமருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடிதம்