சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா (30). இவர் தனது சகோதரர் கபில் (27) என்பவருடன் நேற்று ஊபர் ஆட்டோவில் தேனாம்பேட்டைக்குச் சென்றுள்ளார். அப்போது புரசைவாக்கம் ELM பள்ளி அருகே சில்லறை பிரச்னை தொடர்பாக அவர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இதுவரை பயணம் செய்த தொகையான 70 ரூபாயைக் கொடுத்துவிட்டு இருவரையும் இறங்குமாறு ஆட்டோ ஓட்டுநர் ஜோதி (31) என்பவர் கூறியுள்ளார். இதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே ஆட்டோ ஓட்டுநரான ஜோதிக்கும், கபிலுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.