தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செல்போன் பறிப்பு.. 400 சிசிடிவி ஆய்வுக்கு பிறகு சிக்கிய இளைஞர்கள்! - பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சுவாச்

சென்னை நந்தம்பாக்கத்தில் தொடர்ந்து 8 இடங்களில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இளைஞர்களை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட இருவரும் காவல் துறையின் ரகசிய விசாரணையில் உள்ளனர்.

சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செல்போன் பறிப்பு
சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செல்போன் பறிப்பு

By

Published : Jun 25, 2023, 8:27 PM IST

சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் செல்போன் பறிப்பு

சென்னை: திருடுவதெல்லாம் இப்போ திறமை என்ற எண்ணத்தில் சிலர் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வயது வரம்பின்றி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை இரக்கமின்றி திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது கணிசமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் நகரங்களில் இப்படியான சம்பவங்கள் நடைபெறாது என நம்பிய காலகட்டங்கள் மாறி பெரு நகரங்களில் அதிகளவிலான திருட்டுச் சம்பவங்கள் எண்ண முடியாத அளவிற்கு நூதன முறையின் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் அவ்வப்போது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினாலும், எதையும் கண்டுகொள்ளாமல் அசட்டுத் தன்மையில் மீண்டும் மீண்டும் குற்றச் சம்பவங்கள் நீடிக்கின்றன. இப்படியான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோர், பொது மக்களின் உயிரை பணயம் கொண்டு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இது குறித்து காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவ்வப்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அரங்கேறிய கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் அதிகரித்துள்ளது.

போரூரை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இரு தினங்களுக்கு முன்பு இவர் வேலை காரணமாக நந்தம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். அதே போல் எல் அண்ட் டி அருகே நடந்து சென்ற அனுப் என்பவரிடம் இருந்தும் அதே நபர்கள் செல்போன் பறித்து சென்றுள்ளனர்.

அதற்கு சற்று முன்பாக தொடர்ச்சியாக யானைகவுனி, தேனாம்பேட்டை, கிண்டி, நந்தம்பாக்கம், பூந்தமல்லி, திருமழிசை உள்ளிட்ட இடங்களில் 8 செல்போன்களை பறித்து சென்றுள்ளதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர தணிக்கையில் ஈடுபட்டும் இருவரையும் பிடிக்க முடியாமல் திணறினர்.

இந்நிலையில் நந்தம்பாக்கம் போலீசார் பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சுவாச் தலைமையில் தனிப்படை அமைத்து 400 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, எட்டு இடங்களில் கைவரிசை காட்டிய இருவரையும் கைது செய்துள்ளனர். விசாரணையில் இருவரும் ஏழுகிணறை சேர்ந்த தனுஷ்(19), மற்றும் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பரத்(19), என்பது தெரிய வந்துள்ளது.

இருவரும் சேர்ந்து வரும் வழியெல்லாம் தொடர்ந்து 8 இடங்களில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நந்தம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து இரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க:துபாயில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி!

ABOUT THE AUTHOR

...view details