தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தங்கையை ஏமாற்றிய காதலனை கத்தியுடன் மிரட்ட வந்த இளைஞர்கள் கைது! - தங்கையை ஏமாற்றிய காதலன்

சென்னை: புழல் அருகே தங்கையை காதலித்து ஏமாற்றிய இளைஞரை கத்திமுனையில் மிரட்ட முயற்சித்த இரண்டு இளைஞர்களை புழல் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

two guys arrested

By

Published : Nov 9, 2019, 12:45 PM IST

சென்னை செம்பியம் நெடுஞ்சாலையும் சூரப்பட்டு சாலையும் சந்திக்கும் அரசு மதுபானக் கடை அருகே புழல் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், பெரம்பூரிலிருந்து செங்குன்றம் நோக்கி வந்த ஆட்டோவை மடக்கியபோது, அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது. இதனையடுத்து காவல் துறையினர் ஆட்டோவை துரத்தி சென்று பிடித்தனர். அப்போது காவல் துறையினரைக் கண்டதும் ஆட்டோவில் வந்த இரண்டு இளைஞர்கள் தப்பி ஓடினர்.

இரண்டு வாலிபர்களை கைது செய்த இளைஞர்

இதன் பின்னர், ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் ஆட்டோவில் வந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தபோது ஆட்டோவில் பெரிய கத்தி ஒன்று இருந்தது. சந்தேகமடைந்த காவல் துறையினர் இருவரையும் புழல் காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரணை செய்தனர்.

இதில், சென்னை கொளத்தூர் நேர்மை நகர் 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (24), கொளத்தூர் சத்யசாய் நகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (19) என்பது தெரியவந்தது. விக்னேஷ் என்பவரின் தங்கை ஜாஸ்மினை சதீஷ் என்ற இளைஞர் காதலித்து ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

அதனால் சதிஷை மிரட்டுவதற்காக ஆட்டோவில் நண்பர்களுடன் கத்தியுடன் வந்தோம் என விசாரணையில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து புழல் காவல் ஆய்வாளர் தங்கதுரை வழக்குப்பதிவு செய்து விக்னேஷ், தனசேகர் ஆகியோரை கைது செய்து, அவர்கள் ஓட்டி வந்த ஆட்டோவையும் கத்தியையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும், தலைமறைவாக இருக்கும் இருவரை காவல் துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details