தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெரினா கடல் அலையில் சிக்கி 2 இளைஞர்கள் மாயம் - சென்னை மெரினா

சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் மாயமானதையடுத்து மீட்புப் படையினர் அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

இரண்டு இளைஞர்கள் மாயம்
இரண்டு இளைஞர்கள் மாயம்

By

Published : Oct 2, 2021, 7:17 PM IST

சென்னை:மெரினா கடற்கரையில் குளிக்கச் சென்று அலையில் சிக்கிய மாணவர்கள் மாயமாகி உயிரிழக்கும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. குறிப்பாக கரோனா ஊரடங்கிற்குப் பிறகு ஆகஸ்ட் 23ஆம் தேதிமுதல் மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது முதல் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளிக்கச் சென்றபோது கடலில் மூழ்கி மாயமாகி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இன்று (அக். 2) மெரினா கடற்கரையில் வெவ்வேறு இடங்களில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் மாயமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான நிர்மல் குமார் தனது ஐந்து நண்பர்களுடன் குளிக்கும்போது அலையில் சிக்கி மாயமானார்.

தேடும் பணி தீவிரம்

தகவலறிந்த அண்ணா சதுக்கம் காவல் துறையினர், தீயணைப்பு, மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து கடலில் மாயமாகிய நிர்மல் குமாரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலின் அருகே குளித்துக்கொண்டிருந்த விஜயகுமார் என்பவர் திடீரென அலையில் சிக்கி கூச்சலிட்ட நிலையில் இருந்தபோது தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மீட்புப் படையினர் விரைந்து விஜயகுமாரை மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து கருணாநிதி நினைவிடம் பின்புற கடலில் மற்றொரு வடமாநில இளைஞர் ரோஹித் குமார் கடலில் சிக்கி மாயமாகியதாக மீட்புப் படையினருக்குத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து, கடலில் சிக்கிய இரண்டு இளைஞர்களை கடலோர பாதுகாப்புக் குழுமத்துடன் இணைந்து மீட்புப் படையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இரண்டு இளைஞர்கள் மாயம்

விடுமுறை நாளான இன்று மெரினா கடற்கரையில் அதிகளவிலான கூட்டம் வந்துள்ளதால் கடலில் சிக்கி இரண்டு இளைஞர்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புலி தாக்கி மாடு மேய்க்கச் சென்றவர் உயிரிழப்பு: புலியைத் தேடும் பணி தீவிரம்

ABOUT THE AUTHOR

...view details